மாடுகளை இறைச்சிக்காக கடத்திய கும்பல் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு, மூங்கிலாறு பிரதேசங்களில் கும்பல் ஒன்று தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இறச்சிக்காக களவாடி விற்பனை செய்து வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த கும்பல் நேற்று (18.06.2025) இரவு வாகனம் ஒன்றில் மாடுகளை திருடி ஏற்றியவேளை மக்கள் தகவல் அறிந்து புதுக்குடியிருபு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
பொலிஸார் உடனடி நடவடிக்கை
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வாகனம் ஒன்றில் இரண்டு மாடுகள் ஏற்றப்பட்ட நிலையில் நான்கு நபர்கள் மாடுகளை திருடியுள்ளார்கள்.
இருட்டுமடு கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களும், மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சான்று பொருட்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.










ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 19 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
