கணேமுல்ல சஞ்சீவவின் சிறையில் கையடக்க தொலைபேசி!
நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு கணேமுல்ல சஞ்சீவ தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து ஒரு கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சிறைச்சாலை தரப்பு மேற்கொண்டு வரும் விசாரணைகளின்படி, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிகாரிகள் உட்பட 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை வட்டார தகவல்
சிறைச்சாலை வட்டார தகவல்களின்படி, பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு அதிகாரிகள் மற்றும் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணைகள் சிறைச்சாலைகளின் உதவி கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீது நேற்று (26) நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்புப் பிரிவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை, மினுவங்கொடை - பத்தடுவன பகுதியில், கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீது அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது காலிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கம்பஹா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் அல்ல என்றாலும், அவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, அவரது கூட்டாளிகள், கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் பகை தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இன்றைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாக சைதன்யாவின் தண்டேல் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
