அதி ஆபத்தான பகுதியாக மாறிவரும் கம்பஹா மாவட்டம்!
2021 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தினுள் 12,555 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 7,003 பேர் தொடர்ந்தும் வீடுகளில் உள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கம்பஹா மாவட்ட கொவிட் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனங்காணப்பட்டுள்ள 12,555 தொற்றாளர்களில் இதுவரை 4,046 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,506 பேர் வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
அதேபோல், 2020 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தில் 1,033 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதில் 55 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதிவான மரணங்களில் 135 மரணங்கள் நீர்க்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகி உள்ளதாக இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
