முக்கிய வழக்கொன்றிலிருந்து கம்மன்பில விடுதலை
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோரை மோசடி வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல் குறித்த உத்தரவை இன்றையதினம்(24) வழங்கியுள்ளார்.
அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனப் பங்குகளை போலியான சட்டப் பத்திரம் தயாரித்து விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாவை முறைகேடு செய்ததாக உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்குத் தாக்கல்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
