காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு வரும் பிரித்தானியாவில் விருது பெற்ற நடிகர் (Photos)
பிரித்தானியாவின் ஒலிவியர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற இலங்கையரான இளம் நடிகர் ஹிரான் அபேசேகர இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

விருதை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலங்கையின் நிலவும் நிலைமை பற்றி பேசிய அவர், இலங்கையில் போராட்டம் நடத்தி வருவோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹிரான் அபேசேகர இன்றிரவு கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

நாடகம், ஒபார நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒலிவியர் விருது வழங்கப்படுகிறது. ஹிரான் அபேசேகர Life Of Pi என்ற நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
UK-based Sri Lankan actor Hiran Abeysekera who recently won the best actor award at the 2022 Olivier Awards arrived in Sri Lanka today. #Lka pic.twitter.com/iuP1rrGRG4
— Manjula Basnayake (@BasnayakeM) April 18, 2022
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri