G7 நாடுகளால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்-உலக செய்திகள்
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை குறிவைத்து புதிய தடைகளை G7 நாடுகள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ரஷ்ய போர்க்களத்திற்கு தேவையான பொருட்களை முடக்குவதே ஜி7 நாடுகளின் சமீபத்திய முயற்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ரஷ்ய எரிசக்தி மீதான சர்வதேச நம்பிக்கையை மேலும் குறைப்பது போன்ற திட்டங்களும் கைவசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் போரை ஆதரிக்கும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதும் உள்ள தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா சுமார் 300 புதிய தடைகளை அறிவிக்கும் என்றும் அந்த அமெரிக்க அதிகாரி கூறினார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,