2021 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் கோரப்பகிறது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணையவழியாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறு
இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், DoE எனும் செயலி ஊடாக அல்லது onlineexams.gov.lk/eic எனும் தளம் ஊடாக இதற்காக விண்ணப்பிக்க முடியுமென, திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை, இப்பரீட்சையின் 60 வினாக்கள் கொண்ட (பல்தேர்வு, சுருக்க விடைகள்) பகுதி II வினாத்தாள் முதலிலும், இடைவேளையைத் தொடர்ந்து 40 வினாக்கள் கொண்ட (3 தெரிவுகள் கொண்ட பல்தேர்வு வினாக்கள்) பகுதி I வினாத்தாளும் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்பு உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் தற்போது அனுப்பப்பட்டூள்ளன. இதுவரையில் இவ் வரவு இடாப்பு ஆவணம் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் உரிய ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கீழே தரப்பட்டுள்ளவாறு செயற்பட வேண்டும்.
இப் பரீட்சைக்கு நிகழ்நிலை முறைமையின் மூலம் விண்ணப்பித்த பரி்சார்த்திகளின் விவரங்களடங்கிய அச்சுப்பிரதியுடன், வேண்டுகாள் கடிதமொன்றையும் இணைத்து இத்திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளைக்கு உடனடியாக வருகைதந்து அவ் ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புகள் :
தொலைபேசி இலக்கம் : 011- 2785922, 278420, 2784537, 278616.
அவசர அழைப்பு இலக்கம் : 119 தொலைநகல் இலக்கம் : 011-278422
தபால் முகவரி :
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை,
இலங்கை பரீட்சைத் திணைக்களம்,
பெலவத்தை, பத்தரமுல்ல

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
