சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் காலம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில்
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாமென்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருவது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

பங்கேற்கும் மதிப்பீட்டாளர்களுக்கு 1,450 ரூபா முதல் 2,000 ரூபா 2023 (2024) இல் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டாளர்களுக்கு கொடுப்பனவு செலுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மதிப்பீட்டுப் பணிகளில் பங்கேற்கும் தலைமைக் கட்டுப்பாட்டாளர் ஆய்வாளர்கள், இணைக் கட்டுப்பாட்டாளர் ஆய்வாளர்கள், தலைமை ஆய்வாளர்கள் மற்றும் கூடுதல் தலைமை ஆய்வாளர்களுக்கான ஒட்டுமொத்தப் பணிக்காக 2022 (2023) க.பொ.த. (உயர் நிலை) 2023 (2024) பரீட்சை மதிப்பீடுகளுக்கு செலுத்தப்படும் திருத்தப்பட்ட கொடுப்பனவுகள் உயர்தர பரீட்சை மதிப்பீட்டு செயல்பாடுகளுக்கு கொடுப்பனவை செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri