இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் அபாயம்
இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திறைசேரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை மத்திய வங்கி புதிய பணம் அச்சிடுவதை இடைநிறுத்தினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
திறைசேரியின் நிதித் தேவைக்கு ஏற்ப தேவையான பணத்தை மத்திய வங்கி அச்சடித்து வழங்குவதே இதுவரை வழக்கமாக நடந்து வந்தது. அது இடைநிறுத்தப்பட்டால், திறைசேரி மாற்று நிதி வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் தாங்கும் அளவிற்கு பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்கும் புதிய சட்டம் தொடர்பிலும் கடந்த வாரம் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவின் மூலம், அரசாங்கம் நிதி அமைச்சகத்திடம் எத்தனை கோரிக்கைகளை முன்வைத்தாலும், பணத்தை அச்சிடாத அதிகாரம் மத்திய வங்கிக்கு உள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரையின் பிரகாரம் இந்த புதிய ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதங்கள் பாரிய அளவில் உயரும் என குறிப்பிடப்படுகின்றது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan