நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஐந்து கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது.
1. கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட்,நிமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா மற்றும் கடுமையான நீரிழிவு நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. புலத்கொஹ_பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட்,நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா மற்றும் இருதய நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.






ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
