கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறைக்கு பாரியளவு நிதி ஒதுக்கீடு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
இதில், கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை, சமூக சேவைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புத் துறைகளின் மேம்பாட்டிற்காக சுகாதார அமைச்சின் நிறுவனங்களால் மட்டும் 3,371.05 மில்லியன் ரூபாய் அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கலந்தாலோசனை
மேலும் அந்த நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், மாகாண சுகாதார சேவைகள் துறை, சுதேச ஆயுர்வேத மருத்துவத் துறை, சமூக சேவைகள் துறை, நன்னடத்தை மற்றும் சிறுவர்கள்கள் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் திட்ட முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்குமாறு ஆளுநர் நிறுவனத் தலைவர்களுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் துறை சார் நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் பங்கு பற்றினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam