எரிபொருள் கொள்வனவு செய்யும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1500 ரூபாவுக்கும், கார், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 5,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிப்பது என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்திருந்தது.
எனினும் பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளையும் நீக்குவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam