எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மூன்று பெண்களை காணவில்லை: வரிசைகளில் நடக்கும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள்
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் பலர் பகல் நேரத்தில் மாத்திரமல்லாது இரவு நேரத்திலும் வரிசைகளில் நிற்பதை அதிகளவில் காணக் கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பெட்ரோலை கொள்வனவு செய்ய சென்றிருந்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ரீதியான சீர்கேடு சம்பவங்கள்

மற்றுமொரு பெண் கணவனை ஏமாற்றி விட்டு இன்னுமாரு இளைஞனுடன் இருந்துள்ளார்.
இதனிடையே சிலாபம் பிரதேசத்தில் இரவு நேரத்தில் எரிபொருள் வரிசையில் இருந்த பெண்ணொருவர் இளைஞர் ஒருவருடன் சில மணி நேரங்களை கழித்தன் காரணமாக கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தந்திரமாக கணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்த பெண்

வரிசையில் நின்றிருந்த கணவனை தந்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள பெண் இரவில் வரிசையில் இருந்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற கணவன் எரிபொருள் வரிசைக்கு திரும்பி வந்த போது அங்கு மனைவி இருக்கவில்லை.
இதனையடுத்து தேடிப்பார்த்ததில் மனைவி, எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவருடன் ஓரிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த இடத்திற்கு சென்ற கணவன் மனைவியை தாக்கியுள்ளதுடன் எரிபொருளை கொள்வனவு செய்யாது வீட்டுக்கு திரும்பிச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam