எரிபொருள் நெருக்கடி : பாடசாலைகள் மூடப்படுமா.. தீர்மானம் இன்னும் இல்லை!
எரிபொருள் நெருக்கடி, விலை அதிகரிப்பு மற்றும் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவோ அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தவோ இதுவரையில் கல்வி அமைச்சு எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
பாடசாலைகள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளைத் தொடரும் என்றும் கல்வி அமைச்சு வட்டார தகவலக்ள் தெரிவிக்கின்றன.
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
உயர்மட்டக் கலந்துரையாடல்
இருப்பினும், நாட்டில் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்களை நிவர்த்தி செய்வதற்காக நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, பல அமைச்சக செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் கலந்து கொண்டார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியத் துறைகளில் அதன் சாத்தியமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய பொதுச் சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam