எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா? வெளியானது தகவல்
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரசாங்கத்திடம் மீளவும் யோசனை முன்வைத்துள்ளது.
விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்த யோசனையை அனுப்பி வைத்துள்ளதாக, கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
எவ்வாறிருப்பினும், குறித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவேண்டிய அவசியத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக சுமார் 50 ரூபா நட்டத்தையும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக சுமார் 15 ரூபா நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளது.
எவ்வாறிருப்பினும், முன்னதாக கருத்து தெரிவித்திருந்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, டீசல் ஒரு லீற்றருக்காக 35 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக 5 ரூபாவும் நட்டம் ஏற்படுகின்றதென, கனியவள கூட்டுத்தாபனம் அறியப்படுத்தி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், கடந்த ஆறாம் திகதி நள்ளிரவு முதல், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri