நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.ஓ.சீ அல்லது இந்தியன் லங்கா இந்தியன் ஒயில் கோர்பிரேசன் நிறுவனத்தினால் விற்பனை செய்யும் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri
