நாட்டில் எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
நாட்டின் எரிபொருள் நுகர்வு குறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அண்மைக்கால மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மே மாதத்தில் இவ்வாறான நிலைமை பதிவாகியுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலப்பகுதியில் நாட்டின் மிக உயர்ந்த எரிபொருள் நுகர்வு கடந்த மார்ச் மாதத்திலேயே பதிவாகியிருந்தது.
எரிபொருள் இறக்குமதிக்கான கொள்முதல் கட்டளை

இதேவேளை, நாட்டின் எதிர்கால எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் கட்டளைகள் தற்போதே பிறப்பிக்கப்பட்டு வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan