உண்மையான கணக்கீட்டின்படி ஒரு லீட்டர் எரிபொருள் 700 ரூபா! விலை குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும், உள்நாட்டில் உடனடியாக விலையைக் குறைக்க முடியாது.
எரிபொருள் விலை
தற்போது சந்தையிலுள்ள எரிபொருள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதுடன், அதன் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
உண்மையான கணக்கீட்டின்படி ஒரு லீட்டர் எரிபொருள் 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட வேண்டும்.

எனினும், அரசாங்கத்தின் நிவாரணம் காரணமாகவே அதனை 400 ரூபாய்க்கு வழங்க முடிகிறது.
சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே விலை குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.