ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய எரிபொருள் விலையின் புதிய சூத்திரம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமைய அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் அமைச்சு இந்த சூத்திரத்தை நடைமுறைப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சூத்திரம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) பெற்ற இலாபம் அல்லது நட்டத்துடன், எரிபொருளின் மீது விதிக்கப்படும் உண்மையான வரித் தொகை மற்றும் விலையை அதிகரிப்பது அல்லது குறைப்பது ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான ஒரு முறையாக புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஆட்சியில் அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் வழிகாட்டலின் கீழ் எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சூத்திரம் இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam