முன்னிலை சோசலிசக் கட்சி சதித்திட்டத்தில் ஈடுபடும் கும்பலை கொண்ட கட்சி- லால் காந்த
முன்னிலை சோசலிசக்கட்சி என்பது முற்றாக சதித்திட்டத்தில் ஈடுபடும் கும்பலை கொண்ட அணி என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த குழுவினர் வயிற்று பிழைப்பு நடத்துவோர் இணைந்த அணியினர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
காலத்தின் தேவைக்காக சூழ்ச்சி செய்யும் கட்சி

கும்பல் என்பது காலத்தின் தேவைக்காக சூழ்ச்சி செய்பவர்கள். அந்த இடத்திலேயே அரசியல் அமைப்புக்கும், கும்பலுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
முன்னிலை சோசலிசக்கட்சி என்பது மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகி சென்றுவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. 1988, 1989 ஆம் ஆண்டுகளில் நடந்த வன்செயல்களில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீர உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
கொள்கை ரீதியான முரண்பாடுகளால் ஜே.வி.பியில் இருந்து விலகி குணரட்னம் அணி

இதன் பின்னர் 1990 ஆம் ஆண்டுகளில் குமார் குணரட்னம், சோமவங்ச அமரசிங்க உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து மக்கள் விடுதலை முன்னணியை மீண்டும் மறுசீரமைத்து அரசியலுக்கு கொண்டு வந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணிக்குள் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக குமார் குணரட்னம் உள்ளிட்ட குழுவினர் அதில் இருந்து விலகி, முன்னிலை சோசலிசக்கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர்.

நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், முன்னிலை சோசலிசக்கட்சியினர், தற்போது மக்கள் விடுதலை முன்னணியை விட அரசியல் ரீதியாக செயற்பாடுகளில் தீவிரம் காட்டி செயற்பட்டு வருவதுடன் மக்கள் மத்தியில் அந்த கட்சியின் மாணவர் அமைப்பு உட்பட தொழிற்சங்க அமைப்புகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 13 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan