வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கான விடுமுறை! வெளியாகியுள்ள முக்கிய தீர்மானம்
அரச ஊழியர்களுக்கு இந்த வாரம் தொடக்கம் வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக கொடுப்பனவு தொடர்பில் கவனம்
எரிபொருள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 3 மாத காலத்திற்கு இந்த வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கான சுற்றுநிரூபமொன்று அரச நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த விடுமுறை தினத்தில் மேலதிக கொடுப்பனவு அல்லது வேதனம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



