பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் முதல் பெண் சபாநாயகர் தெரிவு
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் முதல் பெண் சபாநாயகராக பிரவுன் பிவெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரான்சில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான மையவாத கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், பெரும்பான்மையை பெற தவறியுள்ளது.
இந்நிலையில்,தேர்தலுக்கு பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
அதிக வாக்குகளை பெற்று வெற்றி
இதில் இம்மானுவேல் மேக்ரானின் மையவாத கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட யேல் பிரவுன் பிவெட் என்கிற பெண் எம்.பி. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை யேல் பிரவுன் பிவெட் பெறுகின்றார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
