பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரை அடிமைகள் போல நடத்திய நிறுவனம்! வழங்கப்பட்ட தண்டனை
பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரை அடிமைகள் போல நடத்திய ஷாம்பெய்ன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட புலம்பெயர்ந்தோர், காலை 5.00 மணி முதல் மாலை 6.00 மனி வரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு உணவோ தண்ணீரோ வழங்காமல் பழங்கால கட்டிடம் ஒன்றில் தங்க வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தில் சரியான கழிவறைகளோ குளியலறைகளோ இல்லாத இடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுயமரியாதை என எதுவுமே கொடுக்கப்படாமல் தொழிலாளர் தங்கவைக்கப்பட்டது தொழிலாளர் நல அதிகாரிகளின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
இதனையடுத்து, நிறுவனத்தை நடத்திய 40 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் பணியாற்றும் இரண்டு ஆண்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் பாதிக்கப்பட்டோருக்கு தலா 4,000 யூரோ வரையிலான இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
