நுவரெலியாவில் தொடரும் உறைபனி பொழிவு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நுவரெலியாவில் காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்றைய தினமும்(24.01.2026) பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது.
நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நுவரெலியா வானிலை மையத்தில் 7.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் இந்த பனிமூட்ட நிலைமை அதிகமாகக் காணப்படுகிறது.
இதன் காரணமாக, அந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகவும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri