எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம் - டக்ளஸ் தெரிவிப்பு

Jaffna Douglas Devananda Ranil Wickremesinghe Ministry of Defense Sri Lanka
By Theepan Jul 16, 2026 12:17 PM GMT
Report

நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றையதினம்(16.07.2026) நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 67 பேருக்கு டெங்கு தொற்று : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

வவுனியாவில் 67 பேருக்கு டெங்கு தொற்று : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

பல ஏக்கர் காணிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், 

யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி விடுவித்திருந்தோம்.

ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்திலும் பெருமளவான காணிகளை விடுத்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால், அவற்றை விடுவிக்க முடியாமல் போய்விட்டது.

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம் - டக்ளஸ் தெரிவிப்பு | Freed Lands Fought For The Disappeared

ரணிலின் ஆட்சி காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீளக் கையளிக்கவில்லை.

அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை நாமே முதலில் தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும் தெரியும். யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு கால பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம்.

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

காணாமல் ஆக்கப்பட்டோர்

அப்போது காணாமல்போனோர் தொடர்பான விபரங்களை சேர்த்தோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அக்காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார் 600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம். மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை, சாரதாம்பாள் படுகொலை தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம் - டக்ளஸ் தெரிவிப்பு | Freed Lands Fought For The Disappeared

சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம். இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள் பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள் மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால், அதற்கான சான்றுகள் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினையாக வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 67 பேருக்கு டெங்கு தொற்று : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

வவுனியாவில் 67 பேருக்கு டெங்கு தொற்று : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US