கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்
முல்லைத்தீவு முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் இலவச மருத்துவ முகாம் ஒன்று மு/கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இன்று (07.11.2025) காலை 09:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை இடம்பெற்றது.
இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இலவச மருத்துவ பரிசோதனை, ஆலோசனை மற்றும் இலவச மருந்துகளை பெற்றுக்கொண்டனர்.
பாலகிறிஸ்ணன் நவநீதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் வைத்தியர்கள் Dr. திஜன் MBBS (Jaffna), Dr. தனஞ்சிகா திஜன் MBBS (Jaffna), Dr. சின்ராசா தர்சிகன் MBBS (Jaffna) ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கினர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் முல்லைத்தீவு முன்னேற்றக் கழக நிறுவுனர் சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் மருந்தாளர்கள், மருத்துவ நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்













ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri