சமூக நிறுவனம் மூலம் துவிச்சக்கர வண்டி பெற்று தருவதாக மோசடி
கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அடையாளம் காண்பித்து சமூக நிறுவனம் ஒன்றின் மூலம் துவிச்சக்கர வண்டிகளை குறைந்த விலையில் பெற்று தருவதாக கூறி ஒருவர் தன்னை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சமூக நிறுவனம் ஒன்றிடம் குறைந்த விலையில் துவிச்சக்கரவண்டிகள் இருப்பதாக சுமார் 90 ஆயிரம் ரூபா வரை பெற்று மோசடி செய்துள்ளார்.
தன்னை சண்டிலிப்பாய் பிரதேச கிராம சேவையாளர் ஒருவரின் தம்பி என அறிமுகப்படுத்தியே குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி சேகரிப்பு
இந்த விடயம் தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச உதவி பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட கிராம சேவையாளரை அழைத்து இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டேன். குற்றச்சாட்டை முன்வைத்தவர் கிராம சேவையாளர் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பட்டதாக கூறவில்லை.
அவரது பெயரை பயன்படுத்தி அவரது சகோதரனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். கிராம சேவையாளரிடம் இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை கேட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவரை பொலிஸ் நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri