நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் பொலிஸாரால் கைது
துபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி கலகெதர மற்றும் அக்குரணை பிரதேசங்களில் வசிப்பவர்களிடம் இருந்து 250,000, 100,000 மற்றும் 50,000 ரூபாய்களை வசூலித்த மூன்று முறைப்பாடுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரருக்கு தொழில் விசாக்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணைகளின் போது அந்த விசாக்கள் போலியானவை என்றும் தெரியவந்துள்ளதாக கண்டி மாவட்ட பொலிஸ் மோசடிப் பணியகம் தெரிவித்துள்ளது.
போலி முகவர்கள்

இலங்கையில் குறிப்பிட்ட சில நாட்களாக இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும் வெளிநாடுகளில் தொழில்பெற்று தருவதாக கூறி மோசடி செய்யும் போலி முகவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri