யாழில் புனரமைக்காத வீதியால் பறிபோன உயிர்கள்
உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றைய(23.01.2026) அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத நிலையில் காணப்படுகிறது.
புனரமைப்புக்கு வரையறுக்கப்பட்ட நிதி
அந்த வீதியால் நோயாளர் காவு வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
குறித்த வீதியால் நோயாளர் காவு வண்டி வரமுடியாததால் இதுவரை நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன. இன்னமும் எத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் அந்த வீதியை புனரமைப்பீர்கள்? எனவே விரைவாக அந்த வீதியை புனரமையுங்கள் என்றார்.

இது குறித்து தவிசாளர் ஜெசீதன் கருத்து தெரிவிக்கையில், வீதிகள் புனரமைப்புக்கு வரையறுக்கப்பட்ட நிதியை எமக்கு கிடைக்கிறது.
இயன்ற அளவு நாங்கள் வீதி அபிவிருத்திகளை செய்கின்றோம். பிரச்சினைகளுக்குரிய வீதிகள் தொடர்பான விபரங்களை வழங்குங்கள், விசேட நிதிகள் ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் புனரமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam