தமிழர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது (Video)
மட்டக்களப்பு -கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் நேற்றைய தினம் (31.03.2023) விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி அவரின் கீழ் கடமையாற்றும் இராணுவ லெப்டினன் கேணல் மற்றும் கோப்பிரல் , சாஜன் உட்பட பௌத்த தேரர் ஒருவர் உட்பட 4 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்
தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளான ஸ்கானிங் மெசின், இராணுவ ரக்வண்டி மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட இராணவத்தினர் வெலிகந்தை சாலியாபுர முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும் பௌத்த தேரர் பொல்காவலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவார்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார்
முன்னெடுத்துவருகின்றனர்.





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம்.., பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
