அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு

Jaffna SLFP Maithripala Sirisena Sri Lanka Politician Northern Province of Sri Lanka
By Kajinthan Jul 03, 2023 08:20 AM GMT
Report

அதிகாரத்தில் இருக்கும் போது ஜனநாயகத்தை வழங்கிய ஜனாதிபதி நானே - யாழில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்த போது, அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (01.07.2023) யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்கு கேட்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் எனப் பிரசாரம் செய்தார்கள்.

அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு | Former President Maithripala Sirisena Visit Jaffna

நிறைவேற்று அதிகாரம்

ஆனாலும் எந்த ஜனாதிபதிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதனை நீக்குவதற்கு விரும்பவில்லை. நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என வாக்குறுதி வழங்கினேன் வழங்கியபடி நிறைவேற்றினேன்.

19ஆவது திருத்தத்தின் மூலம் எனக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பாராளுமன்றம் அமைச்சரவை திணைக்களங்கள் மற்றும் ஆணைக் குழுக்களுக்குப் பகிர்ந்து வழங்கினேன்.

அரசியலமைப்பை 20 தடவைகள் திருத்தம் செய்ததில் ஏழு தடவை நிறைவேற்று அதிகாரத்தை அதிகரிப்பதற்காகத் திருத்தம் செய்தார்கள் தற்போது 21ஆவது தடவையாகத் திருத்தம் செய்துள்ளனர்.

உலகில் நான் அறிந்த வரை எந்த தலைவர்களும் ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி ஒருவர் தனது அதிகாரத்தைக் குறைத்தது கிடையாது.

அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு | Former President Maithripala Sirisena Visit Jaffna

ஜனநாயக போராட்டங்களுக்குத் தீர்வு

ஆட்சி அதிகாரம் ஒருவரிடத்தில் காணப்பட்டால் அது ஜனநாயகம் அல்ல ஆதலால் ஜனநாயகம் சார்ந்த அனைத்து துறைகளிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக எனது அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்கினேன்.

எனது 55 வருட அரசியல் வாழ்க்கையில் 35 வருடமாகப் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நிலையில் 25 வருடங்களாக அமைச்சராக இருந்துள்ளேன்.

எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக ஜனநாயக கருத்துக்களை முன்வைக்கும் தேசமாக மாற்றியதுடன் ஜனநாயக போராட்டங்களுக்குத் தீர்வுகளையும் முன் வைத்தோம்.

ஆகவே யாழ்ப்பாணத்தில் உள்ள புத்திஜீவிகள் கல்விமான்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களை சந்தித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதோடு எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானங்களின் உங்களின் பங்களிப்பும் இணைத்துக் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களைப் போல ஒற்றுப்பட வேண்டும்

அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு | Former President Maithripala Sirisena Visit Jaffna  

இந்தியா பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடாக உள்ள நிலையில் இந்தியர்கள் என்ற நீதியில் அனைவரும் ஒன்றுபடுவதைப் போல இலங்கையிலும் இலங்கையர் என்ற நீதியில் அனைவரும் ஒற்றுபட வேண்டும் இந்தியர்களைப் போல இலங்கையர்களும் ஒற்றுபற்று வாழ வேண்டும் என மற்றுமொரு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 30 வருட யுத்தம் வடக்கையும் தெற்கையும் பிரித்த நிலையில் யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடக்கும் நிலையில் எமக்குள் ஒற்றுமைப்படுதல் இல்லாமல் காணப்படுகிறது.

இதற்கு இந்தியா நல்ல உதாரணம். இந்தியாவில் பல இன மொழி, மத மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் இந்தியர்கள் என்ற நீதியில் ஒற்றுமைப்படுவார்கள்.

எமது நாடும் பல இன, மொழி, மதங்களை கொண்ட நாடாக காணப்படுகின்ற நிலையில் எமக்குள் இலங்கையர் என்ற நீதியில் ஒற்றுமைப்பட முடியாமல் உள்ளது.

அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு | Former President Maithripala Sirisena Visit Jaffna

அனைவரும் இலங்கையர்கள்

அதற்கு கடந்த கால கசப்பான அனுபவங்கள், ஆட்சியாளர்களின் கடும் போக்கு சிந்தனைகள் எம்மை ஒற்றுமைப்படுத்தலில் இருந்து விலக்கி வைத்துள்ளது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் வட மாகாணத்துக்கு 21 தடவைகள் வருகை தந்துள்ளேன்.

நான் ஏன் அதிக தடவை வந்தேன் என்பதற்கு காரணம் இருக்கிறது. வடக்கையும் தெற்கையும் சம தளத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

வடக்கில் வாழும் மக்களின் அரசியல் அபிவிருத்தி அன்றாட பிரச்சினைகளைகளை தீர்வு கண்டு அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் சம அந்தஸ்துள்ளவர்களாக பயணிக்க வேண்டும் என விரும்பினேன்.

அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு | Former President Maithripala Sirisena Visit Jaffna

 காணிகளை விடுவித்தேன்

அதற்காக வடக்கு அபிவிருத்தி நிதியத்தை ஆரம்பித்து அதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கினேன்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மயிலிட்டி துறைமுகம் போன்ற அபிவிருத்தி பணிகளை துரிதகதியில் செயல்படுத்தினோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் அகதி முகங்களில் தங்கி இருந்த நிலையில் எனது ஆட்சி காலத்திலேயே சுமார் 2500 ஏக்கர் காணிகளை விடுவித்தேன்.

அதுமட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகன புதிய அரசியல் அமைப்பின் தேவை கருதி புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆரம்பித்தேன் துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் காரணமாக முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. நான் வடக்கு மக்களை மறக்கவில்லை.

அதிகாரத்தைப் பகிர்ந்த முதல் ஜனாதிபதி நானே: யாழில் மைத்திரி பேச்சு | Former President Maithripala Sirisena Visit Jaffna

அவர்களில் 80 வீதமானவர்கள் என்னை ஜனாதிபதியாக்குவதற்கு அர்ப்பணித்தவர்கள் என்பதை புத்திஜீவிகளான உங்கள் மத்தியில் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்திஜீவிகளாகிய உங்களிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன், எமது அயல் நாடான இந்திய நாட்டிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், இந்தியர்கள் என்ற நீதியில் அவர்கள் ஒற்றுமைப்படுவதைப் போல நாமும் இலங்கையர் என்ற நீதியில் ஒற்றுமைப்படுவோமாயின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US