நடாஷா கைது விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகைச்சுவை மேடைப்பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவின் மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைச்சுவை நிகழ்ச்சியின் போது வெளியிட்ட கருத்துக்கள் பௌத்தமதத்தை அவமதிக்கும் விதத்தில் காணப்பட்டன என்ற குற்றச்சாட்டின் கீழ் நடாஷா எதிரிசூரியவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் நகைச்சுவைக் கலைஞர் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று (19) உயர்நீதிமன்றில் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வருத்தம் தெரிவிக்கும் வகையிலான கடிதமொன்றையும் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யும் போது இடம்பெறக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கிய வழிகாட்டல் கோவையொன்றை வெளியிடப் பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் அரச சட்டத்தரனி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam