அரசாங்க கடனை திரும்பச் செலுத்தத் தவறியுள்ள முன்னாள் அமைச்சர்
பொதுஜன பெரமுணவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகையொன்றை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த 2001ம் ஆண்டு கமநல சேவைகள் திணைக்களத்தில் இருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா விவசாயக் கடன் ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 24 வருடங்களாக குறித்த கடனையோ, அதற்கான வட்டித் தொகையையோ திருப்பிச் செலுத்துவதில் இருந்தும் அவர் தவறியுள்ளார்.
வட்டித் தொகை
அதன் பிரகாரம் தற்போது அதற்கான வட்டித் தொகை மாத்திரம் 19 இட்சத்து 75 ஆயிரத்து 233 ரூபா நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அசலையும் வட்டியையும் உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக கமத் தொழில் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |