துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பயணத் தடை
இலங்கை கடற்றொழில், துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சுதர்ஷன பெர்னாண்டோவுக்கு, கொழும்பு தலைமை நீதவான் பயணத் தடையை விதித்துள்ளார்.
சந்தேக நபர், நாட்டிற்கு வந்ததும், அவரை கைது செய்ய குடிவரவுத் திணைக்களத்துக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
முன்னதாக, பெர்னாண்டோ தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி கூட்டுத்தாபனத்தில் உள்ள உயர் பதவிகளுக்கு தனது நண்பர்களை ஆட்சேர்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
அவை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, லஞ்ச ஒழிப்பு ஆணையகம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது, இது வழக்கமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் தவிர்த்து ஊழல் என்று கருதப்படுவதாக ஆணையகம் குறிப்பிட்டது.
இந்த நிலையில் அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், தலைமை நீதவான் சந்தேக நபருக்கு பயணத் தடை விதித்தார்.
அத்துடன், அவர் நாட்டிற்குள் நுழைந்ததும் அவரைக் கைது செய்து, இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் முன்னிலைப்படுத்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு, நீதிவான் அறிவுறுத்தினார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
