பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் மேயர்
ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என்றும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இவர் 2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 12 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam