நீதிமன்ற அழைப்பாணையை மீறிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்:பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில், முன்னாள் ஆளுநருக்கு அழைப்பாணை பிறப்பிக்கட்டிருந்த நிலையில், கடந்த அமர்வில் அவர் மன்றில் முன்னிலையாகாமையால், இன்று(26.10.2022) மன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஆளுநரை 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.