தமிழர்களை துன்புறுத்தும் வகையில் வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும் : இரா.சாணக்கியன்(Photos)

Government Batticaloa Tamil people Shanakiyan
By Kumar Jan 15, 2022 09:32 AM GMT
Report

தமிழர்களைத் துன்புறுத்தும் வகையில் வன இலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்களும் தமிழ் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது.

ஆனால் இன்று பௌத்தமதம் என்றால் பெரும் பான்மையினத்துக்கு மட்டும் சொந்தமானது என்று பார்க்கும் நிலையென்பது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு முன்னெடுக்கப்படும் மண் அகழ்வு நடவடிக்கைகள் குறித்து நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், அது தொடர்பில் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் அம்மன் குளம் கிராமத்தில் காணப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற புல்லுமலையிலல் அமையப்பெற்ற ஹீ சக்தி வேலாயுதர் ஆலய வளாகத்தில் திடீரென்று சென்ற தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் கிராம வாசிகளுக்குத் தெரியப்படுத்தாமல் " இவ்விடம் தொல்லியல் இடம்" பதாதையை நட்டு சென்றுள்ளனர்.

இந்த மலையில் ஆதியாக முருக வழிபாடு இருந்ததாகவும் இந்த முருகன் ஆலயத்தில் நேர்த்தியாகப் பல பக்த அடியார்கள் வந்து பூசை செய்வதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சில பௌத்த மத பிக்குகள் வந்து பார்வையிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தற்போது இவ்வாறு தொல்லியல் இடமாக பதாதைகள் நடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதியைப் பார்வையிட்டதுடன், அது தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

இதேபோன்று விவேகானந்தபுரம் பகுதியில் 35குடும்பங்கள் கல்குவாரிகளில் கல் உடைத்து வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவந்த நிலையில் தற்போது அவை நிறுத்தப்பட்டு அந்த கல்குவாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கடந்த காலங்களில் கல்குவாரி நடாத்திவந்த 35குடும்பங்களும் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

தொல்பொருள் திணைக்களம் என்று கூறிவிட்டு அதற்குள் மக்கள் வரக்கூடாது என்று சொல்வதன் நோக்கம் அப்பகுதிக்குள் விகாரைகளை அமைப்பதற்காகக் கூட இருக்கலாம். இன்று கிழக்கு மாகாணத்தில் 1600க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவையனைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தும் நிலையேற்பட்டால் தமிழர்களின் அனைத்து வழிபாட்டு இடங்களும் பறிபோகும் நிலையேற்படும். ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்களும் தமிழ் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது.

ஆனால் இன்று பௌத்தமதம் என்றால் பெரும்பான்மையினத்துக்கு மட்டும் சொந்தமானது என்று பார்க்கும் நிலையென்பது மிகவும் கவலைக்குரியது. அதேபோன்று இப்பகுதியில் வன இலாகா என்ற போர்வையில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது.

ஆனால் மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சொந்தமான வனலாகா காணியை அதற்குரிய அமைச்சர் 500பேருக்கு மூன்று ஏக்கர் வீதம் பிரித்து வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இதனை நான் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இது தவறான விடயம் அவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று கூறியபோது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சரும் மௌனமாக இருந்தனர்.

ஆனால் இன்று விவேகானந்த புரத்திற்குள்ளேயே வந்து பரம்பரை பரம்பரையாகத் தோட்டம் செய்துவரும் காணிகளை வனஇலாகா அபகரிப்பு செய்யும்போது இவர்கள் மௌனம் காப்பது என்பது கவலையான விடயமாகும். இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்த நாட்டில் தமிழர்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்குமாக வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகக் கவலையான விடயம்.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இன்று கிழக்கை மீட்கப்போகின்றோம் என்று வந்தவர்கள் எல்லாம் அதனை மீட்கமுடியாமல் மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலையையே செய்கின்றனர்.

அவ்வாறு கிழக்கை மீட்கப்போகின்றோம் என்று வந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளருக்கு 35குடும்பங்களின் வாழ்வாதார தொழிலை முன்னெடுத்த கல்குவாரியை நிறுத்திவிட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தான் வேற்றுச்சேனையில் மணல் அகழ்வு நடவடிக்கையிலும் குறித்த அமைப்பாளரே ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US