வாழைச்சேனையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு
வாழைச்சேனை- பொத்தானை பிரதேசத்தில் தொலைபேசி தூண் ஒன்றிற்கு அருகில் பைக்குள் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் இரண்டு மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
வலான மத்திய ஊழல் குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்று அதன் மகசீனுடன், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மற்றும் நான்கு தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
இவை விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகளாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.