மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு தயாரிப்பு!
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தமை சுற்றிவழைப்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த வீட்டை இன்றைய தினம் புதன்கிழமை (2)மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் சுற்றி வளைத்துள்ளனர்.
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாகும் அங்கு பாரிய துர்நாற்றம் வீசி வருவதாக மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி
இன்றைய தினம் காலை அப்பகுதிக்குச் சென்ற மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தலைமையிலான குழுவினர் மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகுதி உணவுப் பொருட்களை மீட்டுள்ளனர்.
மன்னார் மூர்வீதியில் மக்கள் வசிக்க முடியாத நிலையில் காணப்பட்ட குறித்த வீட்டில் பாரிய அளவிலான உணவு பொருள்கள் தயாரிக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இருந்து மனித பாவனைக்கு உட்படுத்த முடியாத சுகாதார வசதிகள் எவையும் முன்னெடுக்காத நிலையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தமை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
