இந்தியா வழங்கிய உணவுப்பொருள்கள் நாட்டை வந்தடைந்தன
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள உதவிப்பொருட்களில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் உள்ளடங்கியுள்ளன.
இலங்கையை வந்தடைந்துள்ள இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கவுள்ளார்.
தமிழக அரசாங்கத்தால் வழக்கப்படவுள்ள உதவிப்பொருட்களின் முதற்கட்ட உதவிப்பொருட்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.
இவ்வாறு கிடைத்துள்ள உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri