யாழ் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப்பொருள் சந்தை கலாசார திருவிழா!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன் விழா மற்றும் சர்வதேச சுற்றுலா தினம் ஆகியவற்றை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப்பொருள் சந்தை, காலாசார திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, பல்வேறு வகையான உணவு உற்பத்திகள், பனைசார்ப் உற்பத்திகள், கைவினைப் பொருட்கள் என பலவிதமான உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியுடன் விற்பனைகளும் இடம்பெறுகின்றன.
காலாசார திருவிழா
நேற்று(27) ஆரம்பித்த இந்தக் கண்காட்சியானது இன்று(28) மற்றும் நாளை(29) நடைபெறவுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam