உணவு பஞ்சம்:வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுங்கள்!:அமைச்சர் பந்துல
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது காய்கறிகளை பயிரிட்டு கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் உலக போர் நடந்த காலத்திலும் உணவு பஞ்சம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வீடுகளிலும் மிளகாய் செடிகள், கத்தரிக்காய் செடிகள், பசளை கீரை போன்றவற்றை பயிரிடுங்கள்.அவற்றை குறுகிய காலத்தில் பயன்பாட்டுக்கு எடுக்க முடியும்.
துரித பயிர் செய்கை குறித்த யோசனையை நாங்கள் முன்வைத்துள்ளோம். ஜனவரி மாதம் முதல் வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது ஒன்றை பயிரிட்டு கொள்ளுங்கள்.
இரண்டாம உலகப் போர் நடந்த காலத்திலும் மிகப் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.