கொழும்பில் விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் கைது
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பிலியந்தலை, வென்னப்புவை, பனாதர, இரத்மலானை மற்றும் மடபாத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 22, 24, 39 மற்றும் 41 வயதுடைய ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
