குடும்பம் ஒன்றினை கொடூரமாக கொலை செய்ய முயற்சி - ஒருவர் பலி - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
கொலை குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு வெலகெதரா பகுதியில் திருமணமாகாத ஆண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்தமை மற்றும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ் நேற்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2001 ஒக்டோபர் 31 ஆம் திகதி வெலகெதராவின் தியகவிட்டாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் இந்தக் கும்பல் புகுந்து, கற்கள், தடிகளாலும், வாள்களாலும் அங்கு வசித்தவர்களை கொடூரமாக தாக்கியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
மரண தண்டனை
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

தந்தை, தாய், அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் கொலை மற்றும் கொடூரமான தாக்குதல் குற்றங்களில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, ஐவருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி மரண தண்டனை விதித்தார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri