இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறியுள்ள கோவிட் தொற்று! - ஒவ்வொரு மணி நேரமும் ஐவர் பலி
நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் கோவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போது பதிவாகும் தொற்றாளர்களை விட பல மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், இதுவரை 19 கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார சேவை பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய சுமார் ஆயிரம் தாதியர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தாதிய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
