சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது (photos)
சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (24.03.2023) பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐவர் கைது
இந்த சம்பவத்தின்போது ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பீடி இலைகள் சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும்
கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் என்பனவற்றை மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம்
ஒப்படிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
