ரோசி சேனாநாயக்கவிற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாடகையில் கார்!
கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்க, வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுப்பதற்காக மாதாந்தம் 500,000 ரூபாவை ஒதுக்க கொழும்பு மாநகர சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தான் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனம் பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வேறு வாகனம் வாடகைக்கு எடுக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், செலவுகளை குறைக்க வேண்டிய நிலையில், அதிக விலைக்கு வாகனங்களை வாடகைக்கு எடுப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
இதனிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகவும், மாற்று வழி இல்லாத காரணத்தினால் தயக்கத்துடன் அதனை செய்ய நேர்ந்ததாகவும் கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவித்தார்.