அநுரகுமாரவின் இந்திய விஜயத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள கடற்றொழிலாளர் பிரச்சினை
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய - இலங்கை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் அண்மையில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் வடபகுதியில் உள்ள மீன்பிடித் தொழிலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உடனடி தீர்வு
எனவே இரண்டு தரப்பினரும் இணக்கமாக உடனடி தீர்வு காண்பதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு எனவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடல் எல்லையை அத்துமீறிச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
