நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு
நாவிதன்வெளி பிரதேசசபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நேற்று சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அமர்வானது பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் அனைத்து உறுப்பினர்களின் சத்திய பிரமாணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபை
தவிசாளரின் கன்னி உரையில், நமது நாவிதன்வெளி பிரதேச சபை 2006ஆம் ஆண்டு தனி ஒரு பிரதேச சபையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை படிப்படியாக வளர்ச்சி அடைந்து சிறப்பான பிரதேச சபையாக விளங்குகின்றது.
இதற்கு இச்சபையின் முன்னை நாள் தவிசாளர்கள், உப தவிசாளர்கள் பதவிக்கால உத்தியோஸ்தர்கள் அனைவரது சிறப்பாக செயல்பாடுகளே காரணமாக அமைந்தது. அத்தகைய ஒத்துழைப்பு எமக்கும் தேவைப்படுகின்றது. இன மத மொழி கலாச்சார அடிப்படைவாத சித்தாந்தங்களை மறந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒற்றுமையுடன் கூடியிருக்கின்றோம்.
மக்களின் எதிர்பார்ப்பு
தேர்தல் அரசியலைக் கடந்து சேவையாற்ற உறுதி கொண்டிருக்கின்றோம். இதுவே உறுப்பினர்கள் அனைவரது இலக்கும் பணியுமாக இருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் எமது நாவிதன்வெளி பிரதேசசபைக்கு மாத்திரமல்ல இந்த முழு பிராந்தியத்திற்கும் வெகுமானத்தை தேடி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
அதுவே எமது மக்களின் எதிர்பார்ப்பு, இதனை நிறைவேற்றுவது எமது தலையாய கடமை. இதற்கு ஏற்றால் போல் உப தவிசாளர், உறுப்பினர்கள் அனைவரும் எமது பிராந்தியத்தினை முன்னேற்றுவதற்கான திட்ட வரைபுகளை வகுத்து அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளை அணுகி எமது பிரதேசத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல தவிசாளர் என்ற ரீதியில் எனது பணி, பங்களிப்பு அனைவருக்கும் எப்போதும் 100 வீதம் எப்போதும் இருக்கும்.
துறை சார் அமைச்சர்களையும் அல்லது நிறுவனங்களின் தலைவர்களை அணுகி அபிவிருத்திகளை மேற்கொள்ள நானும் உறுதுணையாக நிற்பேன். எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்காக எம்முடைய அதிகார எல்லைக்குட்பட்டு சேவையாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.







