இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்
இங்கிலாந்தின் (England) கொன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக முதல் தடவையாக கறுப்பின பெண்ணான கெமி படேனோக் (Kemi Badenoch) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, 44 வயதான படேனொக் இங்கிலாந்தில் ஒரு மிக முக்கிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.
முன்னாள் பிரதமர் ரிசி சுனக்குக்கு பதிலாக அவர் கட்சியின் தலைமையை ஏற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை பொதுத் தேர்தலில், கொன்சவேட்டிவ் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்தது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள்
எனினும் கெமி படேனொக் தமது தொகுதியில் சக வலதுசாரி ரொபர்ட் ஜென்ரிக்கை, 12,418 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

இந்தநிலையில் கட்சியை விட்டு வெளியேறிய வாக்காளர்களை மீண்டும் வெற்றி கொண்டு கட்சிக்கு அழைத்து வரப்போவதாக கெமி படேனோக் உறுதியளித்துள்ளார்.
கடந்த 14 ஆண்டுகால அரசாங்கத்தில் கட்சி ரீதியாக தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள கெமி படேனோக், எதிர்வரும் நாட்களில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்காக நியமிக்கப்போகும் உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன.
கட்சி ஒன்றின் தலைமைத்துவம்
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குள், குடியரசுக்கட்சியின் 6வது தலைவராக பதவியேற்றுள்ள படேனோக், பிளவுபட்ட கட்சியை ஒன்றிணைத்து, பிரதமர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடும் பணிகளை மேற்கொள்வார் என்று ஊடகங்கள் எதிர்வை வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் சிறுபான்மையினரின் வாக்குகளை கவரும் வகையில் போட்டியிடுகின்ற அதேநேரம், இங்கிலாந்திலும் கறுப்பினப் பெண் முக்கிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
இதற்கிடையில் கொன்சவேட்டிவ் கட்சியின் கறுப்பின தலைமையை இங்கிலாந்தின் நடப்பு பிரதமரும் வரவேற்றுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam